வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 20 ஜூலை 2019 (19:05 IST)

”10,000 அளித்தால் பாலாஜியின் ’விஐபி’ ஆகலாம்”… திருப்பதி தேவஸ்தான போர்டு அறிவிப்பு

ரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு விஐபி டிக்கெட் வழங்கும் திட்டம் விரைவில் கொண்டுவரப்படவுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக சமீபத்தில் திருப்பது தேவஸ்தானத்தால் அறிவிக்கப்பட்டது. இதற்கு மாற்று வழி விரைவில் அறிவிக்கப்படுமெனவும் அறிவித்தது. இந்நிலையில் நாடு முழுவதும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்களை அமைக்க புதிதாக உருவாக்கப்பட “ஸ்ரீ வாணி” டிரஸ்டுக்கு ரூ. 10,000 நன்கொடை அளித்தால் ஒரு விஐபி டிக்கெட் அளிக்கப்படும் என ஜெகன் மோகன் அரசு அறிவித்துள்ளது. சாமானிய பக்தர்களின் மீது கவனம் செலுத்துவதற்காகவும், டிரஸ்ட்டின் நன்கொடையை அதிகரிக்கவும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.