புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 15 ஜூலை 2019 (20:27 IST)

ஜெகன் அண்ணா மாஸ்; ஜெகன் அண்ணா க்ளாஸ்... ஆந்திர அட்ராசிட்டி!!

ஆந்திர முதல்வராக பதவியேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி என்ன செய்தாலும் அதை ஆந்திர மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். 
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் திருப்பதி சென்றார். எனவே அவரை வரவேற்க ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கண்ணவரம் விமான நிலையத்துக்கு சென்றுள்ளார். 
 
அப்போது விஜயவாடாவில் உள்ள பேன்ஸ் சர்க்கிள் என்ற பகுதியில் ஜெகனின் வாகனம் சென்று கொண்டிருந்த போது, பின்னால் ஆம்புலன்ஸ் ஒன்று வந்து கொண்டிருப்பதை கவனித்துள்ளார். 
உடனே தன் வாகனம் உட்பட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி ஆம்புலன்ஸிற்கு வழி விடும்படி செய்துள்ளார். ஆம்புலன்ஸ் சென்ற 5 நிமிடத்திற்கு பிறகே அங்கிருந்து வாகனங்கள் நகர்ந்துள்ளது. 
 
ஜெகனின் இந்த செயல் மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. ஜெகன் முதல்வராக இல்லாமல் ஆந்திர மக்களின் குடும்பங்களில் ஒருவராகவே பார்க்கப்படுகிறார். எனவே, அவர் என்ன செய்தாலும் அது வியக்கதக்க வகையில் பாரட்டை பெறுகிறது.