திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 12 ஜூலை 2019 (18:05 IST)

நாங்க 150 பேர், எழுந்து வந்தா அவ்வளவுதான்... நாயுடுவை கதிகலங்க வைத்த ஜெகன்!

ஆந்திரா சட்டசபையில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸூக்கும், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சிக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் வீடியோவாக வைரலாகி வருகிறது. 
 
ஆந்திர சட்டசபையில் வட்டியில்லா கடன் தொடர்பாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேசிக்கொண்டிருந்த போது, அவர் தவறான தகவலை கூறிவதாக எதிர்கட்சியினர் ஜெகனை பேச விடாமல் சத்தம் போட்டு வந்தனர். 
 
இதனால் கடுப்பான ஜெகன் ஆவேசமாக, இதற்கு முன்னர் நீங்கள் பேசும்போது நாங்கள் யாராவது வாய் திறந்தோமா? உங்களுக்கான மரியாதையைத் தர வேண்டும் என்பதால் அமைதி காத்தோம் அல்லவா? 
 
இங்கு எங்கள் ஆதரவாளர்கள் 150 பேர் இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் உங்கள் இடத்திற்கு வந்தால் நீங்கள் தரையில் கூட அமர முடியாது. அறிவில்லையா உங்களுக்கு என ஆவேசமாக பேசினார். 
 
மேலும், நீங்கள் கண்களைப் பெரிதாக்கி எங்களைப் பாத்தால் நாங்கள் என்ன பயந்துவிடுவோமா? முதலில் உங்கள் ஆதரவாளர்களை அமர சொல்லுங்கள் என காட்டமாக பேசினார். 
 
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ...