செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 12 ஜூலை 2019 (13:29 IST)

”சந்திரபாபு நாயுடு கழுதை மேய்த்தாரா?”…ஜெகன் மோகனின் சர்ச்சை பேச்சால் நாயுடு வேதனை

ஆந்திராவின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, “நாயுடு, கழுதை மேய்த்தாரா?” என கேட்ட கேள்வியால் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பெரும் வேதனையில் உள்ளார்.

ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, நேற்று விஜயவாடாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அந்த பேட்டியில், நேற்று சட்டசபையில் ஜெகன் மோகன் ரெட்டியிடம், மாநிலத்தில் நிலவும் வரட்சியை பற்றி கேள்வி எழுப்பியதற்கு, அவர் சம்பந்தமில்லாத வேறு விஷயங்களை பேசினார் என்று குற்றம் சாட்டினார்.

மேலும் அவர், தெலுங்கானாவில் அணைகள் கட்டப்படுவது போல், நமது மாநிலத்திலும் அணைகள் கட்டப்பட வேண்டும் என ஜெகன் மோகன் ரெட்டி அரசிடம் வேண்டுகோள் வைத்தபோது , ”சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்தபோது கழுதையா மேய்த்துகொண்டிருந்தார்?? என்று அவமானப்படுத்தியதாகவும், இது போல் ஒரு அவலமான நிலையைத் தான் இதுவரை கண்டதில்லை எனவும் பெரும் வேதனையோடு செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த மாதம், சந்திரபாபு நாயுடுவின் வீடு, விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக கூறி இடிக்கப்பட்டது. மேலும் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில் கட்டப்பட்ட அரசு கட்டிடமும், விதிகளை மீறி கட்டப்பட்டதாக கூறி இடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.