2.o படத்தை திரையிடக்கூடாது: வலுக்கும் கண்டனங்கள்...
ரஜினி நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 2.0 திரைப்படத்தை வெளியிடக்கூடாது என போராட்டம் நடத்திய கன்னட சலுவளிக் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜை போலீஸார் கைது செய்தனர்.
ரஜினி நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2.0 படம் நேற்று வெளியாகியது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே வேர லெவலில் இருந்த நிலையில் அவை அனைத்தையும் படம் பூர்த்தி செய்துள்ளது என்றுதான் கூறவேண்டும். பல்வேறு மாநிலங்களிலும், பல்வேறு நாடுகளிலும் இந்த படம் பிரம்மாண்டமாக திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் பெங்களூருவில் கன்னட சலுவளிக் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ், 2.0 திரையிடப்பட்ட திரையரங்குகளை முற்றுக்கையிட்டு, இந்த படத்தை திரையிடக்கூடாது என போராட்டம் நடத்தினார். கன்னட திரைபடங்கள் வேறு எந்த மாநிலங்களிலும் பெரிதாக திரையிடப்படுவதில்லை. ஆனால் ரஜினிகாந்த் நடித்த 2.0வை பெங்களூருவில் ஏராளமான திரையரங்குகள் திரையிட்டு வருகின்றனர். இந்த செயலால் கன்னட திரைப்பட கலைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆகவே இந்த மாதிரியான வேற்று மொழிப் படங்களை திரையிடக்கூடாது என முழக்கங்களை எழுப்பியபடி அவர் போராட்டம் நடத்தினார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜை குண்டுகட்டாக கைது செய்தனர். இதனால் சற்று நேரம் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.