9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. கேரளாவில் கொட்டப்போகும் கனமழை..!
கேரளாவில் ஒன்பது மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் மற்றும் ஒரு மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று எர்ணாகுளம் மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட பத்து மாவட்டங்களிலும் இன்று கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்க வாய்ப்பு இருப்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் மீட்பு படைகள் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கேரள மக்கள் இன்று வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edited by Siva