1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 9 நவம்பர் 2023 (07:43 IST)

காலை 10 மணிக்குள் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை..!

இன்று காலை 10 மணிக்குள் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது  
 
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தற்போது பெய்து வரும் நிலையில் இன்று காலை 10 மணிக்குள்  தமிழகத்தில் மழை பெய்யும் பகுதிகள் பின்வருமாறு:
 
சென்னை திருவள்ளூர் நீலகிரி கோயம்புத்தூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருப்பூர் தேனி திண்டுக்கல் ஈரோடு சேலம் நாமக்கல் தென்காசி சிவகங்கை ராமநாதபுரம் மதுரை புதுக்கோட்டை அரியலூர் பெரம்பலூர் திருச்சி கரூர் திருவண்ணாமலை இராணிப்பேட்டை கள்ளக்குறிச்சி விழுப்புரம் கடலூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் தஞ்சாவூர் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
எனவே இன்று  காலை 10 மணிக்குள் வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Siva