1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 9 பிப்ரவரி 2023 (23:22 IST)

மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற கணவன்

andra
தெலுங்கு மொழி தெரியாத காரணத்தால் உயிரிழந்த மனைவியின் சடலத்தை கணவன் தோளில் சுமந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.

ஒடிஷா மா நிலம் கோராபுத் என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர் சமுலு-  ஈது குரு தம்பதியர். சில நாட்களாக ஈது குரு நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்த  நிலையில்,  சமீபத்தில் இருவரும் ஆந்திர மா நிலத்திற்கு வந்திருக்கின்றனர்.

அப்போது, சமுலுவின் மனைவி ஈதுகுருவுக்கு உடல் நிலை மோசமாகவே, விசாகபட்டினத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

அதில், சிகிச்சை பெற்றும் உடல்  நிலை குணமடையாத நிலையில், விஜய நகத்திற்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளனர்.

இருவரும் ஆட்டோவில் செல்லும்போது,  ஈதுகுரு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

தன் மனைவியின் உடலை ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும்படி கேட்டுள்ளனர். ஆனால்,  அவருக்கு தெலுங்கு மொழி  தெரியாத காரணத்தால், மனைவியின் உடலை சுமந்து கொண்டு சுமுலு சாலையில் சென்றுள்ளார்.

போலிஸார் அவரிடம் விசாரித்து, ஆறுதல் கூறி, ஆம்புலன்ஸுக்கு உதவி செய்து கொடுத்தனர்.