திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 6 பிப்ரவரி 2023 (16:21 IST)

58 வயது பெண்ணை கொலை செய்த 16 வயது சிறுவன் கைது

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டம் கைலாசபுரி என்ற கிராமத்தில் 58 வயது பெண் ஒருவர் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனடிப்படையில், 16 வயது சிறுவனை கைது செய்துள்ளனர்.

இதில்,  இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறுவன்(16) பக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்கச் சென்றுள்ளான்.

அப்போது, அந்த வீட்டின் இருந்த பெண்ணின் செல்போனை திருடியதாக குற்றம்சாட்டப்பட்டான். இதனால், இரு குடும்பத்தினரும் இடையே சண்டை ஏற்பட்டது.

இதையடுத்து, சிறுவன், அந்தப் பெண்ணின் குடும்பத்தினரை பழிவாங்க எண்ணினான்.

இந்த  நிலையில், 58 வயது பெண்ணை கொலை செய்து,  அருகில் இருந்த கட்டுமானப் பணி நடந்த கட்டிடத்தில் இழுந்துச் சென்று சடலத்துடன் உடலுறவு வைத்துக் கொண்டதாகவும், விசாரணையில் தகவல் வெளியாகிறது.