பெண் குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற முதியவர் கைது!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நரபலி கொடுக்க இருந்த குழந்தையை போலீஸார் மீட்டுள்ளனர்.
நாகர்கோவில் மாவட்டத்தைச் சேரெந்த கண்ணன் – அகிலா என்ற தம்பதியின் மகள் சஸ்விகா. நேற்று மாலையில் மணலி பகுதியில் சிறுமி தாத்தா வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போனார்.
இதுகுறித்து பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், வீட்டில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலையில் இரவு 8 அணிக்கு கார கொண்டான்விளை தென்னந்தோப்பில் உள்ள வீட்டில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது.
உள்ளே சென்று பார்த்தபோது, அக்குழந்தையை வைத்து ஒரு முதியவர் பூகை செய்து கொண்டிருந்தார். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், குழந்தையை ராசப்பன்(66) கடத்தியதும், குழந்தையை நரபலி கொடுக்க குழந்தையைக் கடத்தியதாகக் கூறினர். அவரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.