வியாழன், 30 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified வியாழன், 9 பிப்ரவரி 2023 (16:07 IST)

போலீஸ் உடையில் சமூக வலைத்தள பதிவு கூடாது: அதிரடி உத்தரவு!

police
போலீஸ் உடையில் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வீடியோவை வெளியிடக்கூடாது என உத்தர பிரதேச மாநில காவல்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
இது குறித்து உத்தரபிரதேச காவலர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட புதிய உத்தரவில் பணியில் இருக்கும் காவல்துறையினர் சமூக வலைதளங்களில் சீருடையுடன் வீடியோ அல்லது ரிலீஸ் பதிவேற்ரவோ, நேரடி ஒளிபரப்பு செய்யவோ கூடாது என அம்மாநில டிஜிபி சவுகான் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். 
 
சீருடையில் இல்லாத நேரத்திலும் காவலர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வீடியோ போடவோ, பெண்கள், பட்டியல் இனத்தவர் ஆகியோர்களின் கண்ணியத்தை பாதிக்கும் வகையில் கருத்து தெரிவிக்கவோ கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 
 
இந்த உத்தரவு காரணமாக உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காவல்துறையினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran