1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 8 நவம்பர் 2023 (20:29 IST)

காதலித்து வந்த 14 வயது மகளை கொடூரமாக கொன்ற தந்தை!

கேரளாவில் பெற்ற மகளை தந்தை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளம் மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலா ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள ஆலுவா அருகே 14 வயது மகளை இரும்புக் கம்பியால் தாக்கி, வாயில் பூச்சி மருந்து ஊற்றி கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்தவர் அபீஸ் முகமது. இவரது மகள் அங்குள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். அந்த சிறுமி தன்னுடன் படித்து வந்த பிற மதத்தைச் சேர்ந்த மாணவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதை தெரிந்து கொண்ட தந்தை தன்  14 வயது மகளை இரும்புக் கம்பியால் தாக்கி, வாயில் பூச்சி மருந்து ஊற்றி கொலை செய்துள்ளார். ஒரு வாரமாக  சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.