1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 31 அக்டோபர் 2023 (19:57 IST)

ஃபேக் ஐடி காதலியிடம் ரூ.22 லட்சம் இழந்த நபர்

ஆன்லைன் மூலம் பழகி காதலித்த பெண்ணிடன் ரூ.22 லட்சம் பணத்தை இழந்துள்ளார் புனேவைச் சேர்ந்த நபர்.

உலகில் சமூக வலைதளங்கள் அதிகளவில் உள்ளன. இதன் மூலம் பல நல்ல விஷயங்கள், செய்திகள் உடனுக்குடன் அறிய முடிகிறது. ஆனால், இதைப் பயன்படுத்தி பலர் பண மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த  நிலையில் புனேவைச் சேர்ந்த நபர் ஆன்லைனில் பழகி காதலித்து வந்த பெண் பணக் கஷ்டம் எனக் கூறியதால் ரூ.22 லட்சம் வழங்கியுள்ளார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்ததன் பேரின் பேக் ஐடி காதலியை போலீஸார் கைது செய்தனர். கடந்த 5 ஆண்டுகளாக விஜய் ரொகாடே(42) பெண்குரலில் பேசி வந்துள்ளார். பணத்தை திருப்பிக் கேட்டபோது, ஸ்விட் ஆப் செய்யவே போலீஸில் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.