வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 7 நவம்பர் 2023 (11:19 IST)

கமல்ஹாசனுக்கு இரு மாநில முதல்வர்கள் வாழ்த்து.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

kamal campaign
உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு தமிழகம் மற்றும் கேரள மாநில முதல்வர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் கலை உலகில் பல சாதனைகள் படைக்கும் கலைஞானி கமல்ஹாசன் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நலம் சூழ வாழிய பல்லாண்டு என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதேபோல் கேரள மாநில முதல்வர் தனது வாழ்த்து செய்தியில் அன்பான கமல்ஹாசன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.  திரை உலகில் ஒரு நல்ல நடிகர் மற்றும் அரசியலில் ஒரு நல்ல சமூக வாதியாக இருக்கின்றீர்கள்.  நீங்கள் மக்களின் இதயங்களில் இடம் பிடித்திருக்கிறீர்கள். நீங்கள் மேலும் பல்லாண்டு வாழ்க வளமுடன் உடல் நலத்துடன் இருக்க என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்


Siva