புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வியாழன், 23 ஏப்ரல் 2020 (16:31 IST)

சிறுத்தையுடன் நாய் சண்டையிடும் காட்சி…வைரலாகும் வீடியோ

குஜராத் மாநிலத்தில் ஒரு வீட்டில் வெளியே நாய் படுத்திருந்தது. அந்தநேரம் பார்த்து வீட்டுச் சுவரைத் தாண்டி சிறுத்தை ஒன்று எட்டிகுதித்தது.  அப்போது நாய் குரைக்க ஆரம்பித்தது.

அப்போது, நாயின் கழுத்தை சிறுத்தை எட்டிப்பிடித்தது.ஆனால் விடாமல் போராடிய நாய் சிறுத்தையுடன் போராடியது.

பின்னர்,நாய் தனது வாலை வேகமாக ஆட்டியது. அதைப்பார்த்து நாய் கோபமுடன் இருப்பதாக நினைத்த சிறுத்தை அங்கிருந்து வெளியேறியது. இந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி  காட்சிகளில் பதிவானது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில்  பரவலாகி வருகிறது.