திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 21 பிப்ரவரி 2018 (13:30 IST)

ஆண் குழந்தை பிறக்காத ஆத்திரத்தில் ஒரு மாத பெண் குழந்தையை கொன்ற கொடூர தந்தை

உத்திரபிரதேசத்தில் ஆண் குழந்தை பிறக்காததால் ஆத்திரமடைந்த தந்தை, பிறந்து ஒரு மாதமே ஆன தனது பெண் குழந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அன்றைய காலகட்டத்தில் தங்களுக்கு மகன் பிறக்க வேண்டும் என பல பெற்றோர்கள் தவமாய் தவமிருந்தனர். இதனால் அக்காலகட்டத்தில் பெண் சிசுக் கொலைகள் அதிகரித்த வண்ணம் இருந்தது. அரசின் கடுமையான நடவடிக்கைகளால் இந்த கொடூர சம்பவங்கள் நடைபெறுவது குறைக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது கால மாறிப்போய் தங்களுக்கு எந்த குழந்தை பிறந்தாலும் சந்தோஷம் என பெற்றோர்கள் கருதுகின்றனர். இருந்தபோதிலும் ஆங்காங்கே தங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை என்பதற்காக பெற்றோர்களே பிறந்த பெண் குழந்தைகளை கொல்லும் சம்பவங்கள்  தற்பொழுதும் நடைபெற்று வருவது மறுக்க முடியாத உண்மை.
 
இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் ராஜேஷ் சவுகான் சங்கீதா  தம்பதியினருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் ராஜேஷ் சவுகானுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என விரும்பினர். அப்படி நடக்காமல் போகவே  சங்கீதாவுக்கும், ராஜேஷுக்கும் தினமும் சண்டை ஏற்பட்டது.  வெளியே சென்றிருந்த சங்கீதா வீட்டுக்கு திரும்பி வந்த போது குழந்தை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து சங்கீதாவை அடித்து ஒரு அறையில் வைத்து பூட்டிய ராஜேஷின் குடும்பத்தினர், குழந்தையின் உடலை புதைத்து விட்டனர். கணவரின் பிடியிலிருந்து தப்பிய சங்கீதா, காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.
 
இதனையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய ராஜேஷையும் அவரது குடும்பத்தாரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.