திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (15:14 IST)

கற்பழிப்பு குற்றவாளியை காவல் நிலையத்தில் வைத்து அடித்துக் கொன்ற பொதுமக்கள்

கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளியை பொதுமக்களே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமிகள் மீதான பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் இது போன்ற பாலியல் தொல்லைகள் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் அருணாச்சலபிரதேசத்தில் கடந்த 12 ஆம் தேதி, இளைஞர்கள் இருவர் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தனர். வழக்கை விசாரித்த போலீஸார் குற்றவாளியை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
 
இதனையடுத்து சிறுமி என்றும் பாராமல் இந்த கொடிய செயலை செய்த இளைஞர்கள் மீது கோபத்தில் இருந்த ஊர்மக்கள், காவல் நிலையத்திற்கு சென்று லாக்கப்பை உடைத்து 2 குற்றவாளிகளையும்  தூக்கிச் சென்று சரமாரியாக அடித்து உதைத்தனர். பொதுமக்கள் தாக்கியதில் இருவரும் இறந்தனர். பின்னர் இருவரது பிணங்களையும் தீ வைத்து எரிக்க முயன்றனர். இதனால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பொதமக்களின் இந்த செயலை பலர் பாராட்டி வருகின்றனர்.