1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (14:51 IST)

சினிமா பட பாணியில் கொலையாளியை காப்பாற்றிய கூட்டாளிகள்

டெல்லியில் போலீஸார் கண்களில் மிளகாய் பொடியை தூவி,  கொலையாளியின் கூட்டாளிகள் கொலையாளியை மீட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   
ஹரியானா மாநிலம் குர்கான் பகுதியை சேர்ந்தவர் சந்தீப். கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தீப், திடீரென நெஞ்சு வலி காரணமாக போலீஸார் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மருத்துவப் பரிசோதனை முடிந்து சந்தீப்பை மீண்டும் அழைத்து வந்த போலீஸார் மீது வெளியே இருந்த சந்தீப்பின் கூட்டாளிகள் மிளகாய் பொடியை வீசி ஏறிந்தனர்.
 
இதையடுத்து போலீஸார் அலறி துடித்தனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு சந்தீப்பின் கூட்டாளிகள் அவனை தங்கள் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வேகமாகச் சென்றனர். சந்தீப்பை மருத்துவமனை அழைத்துச் சென்ற போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். போலீஸார் தப்பியோடிய சந்தீப்பை தீவிரமாக தேடி வருகின்றனர்.