ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 1 பிப்ரவரி 2024 (14:01 IST)

ஏழைகளையும் விவசாயிகளையும் கை தூக்கி விடும் பட்ஜெட்..! பிரதமர் மோடி பாராட்டு.!.

modi
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட் ஏழை எளிய மக்கள் மற்றும் பெண்களுக்கான பட்ஜெட் என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசிய பிரதமர் மோடி, ஏழைகளையும் விவசாயிகளையும் கை தூக்கி விடும் பட்ஜெட் இது என்றார். 
 
வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்டின் பலன்கள் மக்களுக்கு நேரடியாக கிடைக்கும் என உறுதி அளிக்கிறேன் என்று தெரிவித்த பிரதமர் மோடி, மத்திய இடைக்கால பட்ஜெட் உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது என்றும் கூறினார்.
 
budjet
எதிர்கால இந்தியா என்ற தாரக மந்திரத்திற்கு வழி சேர்க்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது என்றும் புதிய தொழில் தொடங்குவதற்கான பொன்னான வாய்ப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன என்றும் பிரதமர் தெரிவித்தார்.

 
அங்கன்வாடி ஊழியர்களுக்கு காப்பீடுகள் கொடுக்கப்பட்டது மிகப்பெரிய பாதுகாப்பை  வழங்கி உள்ளது என்று அவர் கூறினார். மேலும்,  சோலார் தகடுகள் அமைப்பதன் மூலம் ஒரு கோடி வீடுகள், இலவச மின்சார சேவை பெற முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். மொத்தத்தில் இந்த பட்ஜெட் ஏழை எளிய மக்கள் மற்றும் பெண்களுக்கானது என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.