பட்ஜெட் தினத்தில் என்ன ஆனது பங்குச்சந்தை: சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!
பொதுவாக பட்ஜெட் தினத்தில் பங்குச்சந்தை மிகப்பெரிய ஏற்றமடையும் அல்லது மிக பெரிய இறக்கம் அடையும் என்பதுதான் இதுவரை இருந்த நிகழ்வாக உள்ளது. இந்த நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்து செய்யப்பட்டு வரும் நிலையில் பங்குச்சந்தையில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இது இடைக்கால பட்ஜெட் தான் என்பதால் பெரிய அளவில் பங்குச்சந்தையில் மாற்றம் ஏற்படவில்லை. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 120 புள்ளிகள் உயர்ந்து 71 ஆயிரத்து 872 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிப்டி வெறும் 24 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 21,749 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது
இன்றைய வர்த்தகத்தில் கோத்ரெஜ், மாருதி சுசுகி , ஸ்ரீ சிமெண்ட்ஸ் ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் வோல்டாஸ், கிளன்மார்க், இந்தியா சிமெண்ட்ஸ் ஆகிய பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
Edited by Siva