1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 23 அக்டோபர் 2018 (19:11 IST)

தக தகவென ஜொலிக்கும் அபூர்வ நாக பாம்பு...!

கர்நாடகாவில் உள்ள ஹோல்மக்கி என்ற கிராமத்தில் வசிக்கும் அவினாஷ் என்பவரின் வீட்டு தோட்டத்தில் இருந்த ஒரு பிரகாசமான பாம்பை பார்த்து அங்குள்ள நாய் ஓன்று குரைத்ததுள்ளது. பிறகு அருகில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்த போது ஒரு ஒளிவீசும் நாகத்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர் . 
 
சாதாரண நாக பாம்பை விட இந்த நாகம் ரெட் லைட் வண்ணத்தில் பிரகாசமாக ஜொலித்து படமெடுத்து காட்டி அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
 
அந்த நாகத்திற்கு தெய்வீக சக்திகள் இருப்பதாக நம்பும் அக்கம் பக்கத்தினர் நாக பக்தர்களாக மாறி வழிபட்டு செய்ய ஆரம்பித்துள்ளனர். ஒரு பக்கம் தெய்வீக நாக பாம்பாக வழிபட்டாலும், மறுபுறம் அது விஷமுடைய நாகம் என்பதால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர் .