புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 23 அக்டோபர் 2018 (15:50 IST)

சபரிமலை வழிபாட்டின் போது உயிரிழக்க வாய்ப்புண்டு : காவல் ஆணையர் மனோஜ்

கேரள உயர் நீதிமன்றத்தில்  சபரிமலைக்கான சிறப்பு ஆணையர் மனோஜ் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கிய நிலையில் பெண்கள் ஒருசிலர் கடந்த சில நாட்களாக சபரிமலைக்கு செல்ல முயற்சித்து வருகின்றனர்.
 
கடந்த 19 ந் தேதி வெட்டி பந்தாவிற்காக கோவிலுக்குள் செல்ல முயற்சித்த பாத்திமா உள்ளிட்ட சில பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் பதற்றம் நிலவியது. 
 
இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். மேலும் வழக்கின் அவசர நிலையை மனதில் கொண்டு இந்த சீராய்வு மனு மீதான விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
 
இந்நிலையில்  அடுத்த மாதத்தில் மண்ட்ல பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்படுகிறது. அப்போது அதிகள்வில் பக்தர்கள் கூட்டம் இருக்கும். இந்த நெரிசலில் சிக்கி பக்தர்கள்,காவல்துறையினர்,மற்றவர்கள் காயமடையவோ உயிரிழக்கவோ வாய்ப்பு உள்ளதாக கேரள மாநில காவல் ஆணையர் மனோஜ் கூறியுள்ளார்.
 
சபரிமலை கோவிலில் ஏற்படும் அசாதரண சூழலால் கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூரியுள்ளார்.
 
கோவிலுக்கு வந்து சாமியை வழிபடும்போது போராட்டம் நடைபெற்றால்  அசாதாரண நிலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.