வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 23 அக்டோபர் 2018 (12:50 IST)

வரதட்சணை கொடுக்காத மருமகளை ரூ1.50 லட்சத்திற்கு விற்ற மாமியார்

ராஜஸ்தானில் வரதட்சணை கொடுக்காத மருமகள்களை அவரது மாமியார் ரூ.1.50 லட்சத்திற்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ராஜஸ்தானை சேர்ந்த நிர்மலா, சர்மிளா ஆகிய இரு சகோதரிகள், மும்பையை சேர்ந்த இரு சகோதரர்களை திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மணமகன் வீட்டார் மணமகள்களிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியுள்ளனர். ஆனால் அவர்களால் அந்த பணப்பேய்கள் கேட்ட தொகையை கொடுக்க முடியவில்லை
 
இதனால் ஆத்திரமடைந்த அந்த சகோதரிகளின் மாமியார், அந்த பெண்களை வரதட்சணைக்காக நபர் ஒருவரிடம் ரூ.150 லட்சத்திற்கு விற்றுள்ளார். இதனையறிந்த அந்த சகோதரிகள், அந்த நபரிடம் இருந்து தப்பித்து இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீஸார் இந்த கீழ்த்தரமான செயலை செய்த அந்த சகோதரிகளின் மாமியார், மாமனார் மற்றும் கணவர்கள் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.