வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 28 ஜூலை 2018 (14:53 IST)

போலீஸ் அதிகாரியை கடத்திய பயங்கரவாதிகள்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் சிறப்பு காவல் அதிகாரியை கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் செய்னாத்தர் கிராமத்தை சேர்ந்த முடாசீர் அகமது என்பவர் சிறப்பு போலீஸ் அதிகாரி ஆக பணியாற்றுகிறார். 
 
நேற்றிரவு வீட்டில் தனியாக இருந்த அவரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்று விட்டனர். 
 
இதேபோல் காஷ்மீரில் கடந்த சில தினங்களுக்கு முன் சலீம் என்ற காவலரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்தனர்.
எனவே அவ்வாறு நிகழாமல் தடுக்க போலீஸார் முடாசீர் அகமதை மீட்கும் பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.