1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 24 ஜூலை 2018 (11:17 IST)

அயன் பட பாணியில் நடந்த கடத்தல் சம்பவம்: தங்கத்தை பேஸ்டில் கலந்து கடத்தல்

தங்கத்தை பேஸ்டாக மாற்றி கடத்தி வந்த கும்பலை ஹைதராபாத் விமானத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமானநிலையத்தில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, மதுரையில் இருந்து ஹைதராபாத் வந்த ஸ்பைஸ் ஜெட் பயணிகளிடம் வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
 
அப்போது பயணி ஒருவர் பையில் சோதனை நடத்தியதில் பேஸ்ட் போன்ற ஒரு பொருள் இருந்தது. சந்தேகமடைந்த போலீஸார், அது தங்கமாக இருக்கலாம் எனக் கருதி அந்த பேஸ்ட்டை தீயிட்டு கொளுத்தினார்கள். சிறிது நேரத்தில் பேஸ்ட் மொத்தமும் உருகி ஆவியானது, அதில் ஒரு கிலோ 10 கிராம் தங்கம் இருந்தது. 
 
இதனையடுத்து போலீஸார் அந்த பயணியை கைது செய்து அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.