1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 20 மே 2024 (17:52 IST)

சத்தீஸ்கரில் பயங்கர விபத்து..! வேன் கவிழ்ந்து 18 பேர் பலி..!!

Accident
சத்தீஸ்கர் மாநிலம் கவர்தா அருகே தொழிலாளர்களை ஏற்றி சென்ற வேன் 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். 
 
பைகா பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 25 பேர் கொண்ட குழு, பாரம்பரிய டெண்டு இலைகளை சேகரித்துவிட்டு பிக்கப் வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பஹ்பானி பகுதிக்கு அருகே 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கி 18 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

 
சிலரது நிலைமை மோசமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.  விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.