1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (13:31 IST)

சத்தீஸ்கரில் நக்சலைட்கள் 7 பேர் சுட்டுக்கொலை.! பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை..!!

Naxalites
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கி சூட்டில் நக்சலைட்கள் 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
 
ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்க்கன்ட், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட்கள் மற்றும்  மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இவர்களை வேட்டையாட தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மாவட்டத்தில் நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.  இதனையடுத்து நாராயண்பூர் மற்றும் கண்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

 
அப்போது நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 7 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.