ஆசிரியரை கல்லால் அடித்து விரட்டிய மாணவர்கள்..என்ன நடந்தது?
மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த ஆசிரியரை மாணவர்கள் கல்லால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் விஷ்னு தேவ்சாய் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
இங்குள்ள ஒரு பள்ளியில் மது அருந்திவிட்டு பள்ளி வந்த ஆசிரியரை மாணவர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியரை, அப்பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் காலணி, கற்களால் தாக்கி விரட்டி அடித்துள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பராவலாகி வருகிறது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து அம்மாநில கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகிறது.
கல்வி கற்பிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஆசிரியரே இவ்விதம் நடந்து கொண்டது குறித்து சமூக வலைதளங்களில் அந்த ஆசிரியர் மீது கண்டனம் குவிந்து வருகிறது.