2ஆம், 3ஆம் இடம் பிடிப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பு.. உச்சநீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு
பாராளுமன்ற தேர்தலில் இரண்டாம் மூன்றாம் இடம் பிடிப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை உச்சநீதிமன்றம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் இரண்டாம், மூன்றாம் இடம் பிடிக்கும் வேட்பாளர்கள் முடிவுகள் வெளியான ஒரு வாரத்திற்குள் வாக்கு இயந்திரங்களை சரிபார்க்க விண்ணப்பம் செய்யலாம் என்றும் எழுத்துப்பூர்வமான விண்ணப்பத்தை பெற்ற பிறகு வாக்கு இயந்திரத்தை பொறியாளர் குழு சோதனை செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
இந்த சோதனையின்போது வேட்பாளர் மற்றும் அவரது பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்றும் சோதனையில் மாவட்ட தேர்தல் அதிகாரி இயந்திரத்தின் நிலை குறித்து வேட்பாளருக்கு விளக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது
மேலும் இதற்கான செலவை வேட்பாளர் தான் ஏற்க வேண்டும் என்றும் ஆனால் அதே நேரத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு இருந்தால் அந்த தொகையை தேர்தல் அதிகாரிகள் திரும்ப அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
Edited by Siva