புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 11 நவம்பர் 2020 (16:52 IST)

அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

கடந்த 2018 ஆம் ஆண்டு கட்டிட பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் சமீபத்தில் ரிபப்ளிக் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மும்பை உயர்நீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டை அணுகினார்
 
சுப்ரீம் கோர்ட்டில் அவரது ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது தனிமனிதரின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்த நீதிமன்றம் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது 
 
இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் அவர் சிறையிலிருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியர் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியதை அடுத்து அவரது குடும்பத்தினரும் மற்றும் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அர்னாப் கோஸ்வாமி ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்