வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 5 நவம்பர் 2020 (07:49 IST)

அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்: மனைவி, மகன் மீதும் எப்.ஐ.ஆர்!

ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை 14 நாட்கள்  நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மும்பையைச் சேர்ந்த அன்வி நாயக் என்ற கட்டிட பொறியாளரின் தற்கொலை வழக்கில் நேற்று காலை கைது செய்யப்பட்ட அர்னாப் கோஸ்வாமி, நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அவரை விசாரணை செய்த நீதிபதி அதன்பின்னர் அவரை 14 நாட்கள் அதாவது நவம்பர் 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அர்னாப் கோஸ்வாமியை காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என மும்பை போலீசார் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் அர்னாப் கோஸ்வாமி கைதின்போது பெண் காவல்துறை அதிகாரி ஒருவரை அர்னாப் கோஸ்வாமியின் மனைவி மற்றும் மகன் தடுத்ததாக இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அர்னாப் மனைவி, மகன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட வாய்ப்பு என கூறப்படுகிறது