புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (08:14 IST)

இலவச இண்டெர்நெட் இப்ப ரொம்ப அவசியமா? – மனுதாரருக்கு குட்டு வைத்த நீதிமன்றம்!

நாடு முழுவதும் கொரோனா தாக்கத்தால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இலவச இணைய இணைப்பு கேட்டு தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்புகளின் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்நிலையில் டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் மனோகர் பிரதாப் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் “ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் தங்கள் உறவினர்களோடு ஆடியோ அழைப்பு அல்லது வீடியோ அழைப்பில் பேசுவது போன்ற்வற்றை விரும்புகின்றனர். எனவே இலவசமாக தொலைப்பேசி அழைப்புகள் மற்றும் இணைய தள வசதிகளை வழங்க மத்திய அரசு மற்றும் தொலைதொடர்பு சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும். ஊரடங்கால் மக்கள் மனரீதியாக பாதிப்பிற்கு உள்ளாவதையும் கணக்கில் கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று வீடியோ கான்பரன்ஸ் முறையில் நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் “ஏன் இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன?” என கடிந்து கொண்டதுடன் வழக்கையும் தள்ளுபடி செய்துள்ளனர்.