ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 27 ஏப்ரல் 2020 (21:48 IST)

நடிகர் அஜித் கெட்டப்பில் தல தோனி … வைரலாகும் போட்டோ

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் அதிக ரசிகர்களைக் கொண்டவருமான தோனி, தனது பொறுமை மற்றும் நிதானத்துக்காகவே 'கூல் கேப்டன்' என அழைப்பட்டார்.

சமீபத்தில் நடந்த போட்டியில் அவர் பங்கேற்காத நிலையில் அவர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பார் என எதிர்ப்பார்கப்பட்ட நிலையில்,கொரொனா வந்து அனைத்து தொழில்களையும் முடக்கிவிட்டது. ஐபிஎல் போட்டிகள் நடக்காததால் ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர். ஆனால் அவ்வப்போது, நட்சத்திரங்கள் வெளியிடும் புகைப்படம் , வீடியோ ரசிகர்களுக்கு ஆதரவாக உள்ளது.

இந்நிலையில், தல தோனி நடிகர் அஜித் போன்று சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தனது மகளுடன் வீட்டில் மோட்டார் சைக்கிளில் வலம் வருவது போன்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.