வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 6 மே 2021 (12:37 IST)

கொலைக்குற்றம் என்று சொல்லியது கொடுமையானது… உச்சநீதிமன்றம் அறிவுரை!

தேர்தல் ஆணையம் மீது கொலைக்குற்றம் சுமத்தலம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியது கொடுமையானது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக உள்ள நிலையில் 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரங்களின்போது கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவதை தேர்தல் ஆணையம் முறையாக கவனிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை கண்டித்ததுடன், கொலை வழக்கு பதிவு செய்ய கூடிய குற்றமாக கடுமையாக பேசியிருந்தது.

இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தேர்தல் ஆணையம் அரசியல் சாசன அமைப்பான தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் நீதிமன்ற ஆய்வுக்கு வராது என வாதிட்டது. இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம் “தலைமை தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான அரசியல் சாசன அதிகாரம் அமைப்பு. எனவே, அதன் மீது மற்றொரு அரசியல் சாசன அதிகாரம் கொண்ட அமைப்பான உயர்நீதிமன்றம் கருத்து கூறக்கூடாது என சொல்லுகிறீர்களா?” என கேள்வி எழுப்பியுள்ளதுடன், நீதிமன்றங்கள் கடுமையான வார்த்தைகளை கூறினால் அந்த தவறை திருத்திக் கொள்ள தேர்தல் ஆணையம் முயல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இதனால் தேர்தல் ஆணையம் இணையத்தில் மேலும் கேலிக்கு ஆளானது. அதனால் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதில் கொலை குற்றம் என்ற வார்த்தையை ஊடகங்கள் பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் எனக் கூறி இருந்தது. அந்த விசாரணையில் உச்ச நீதிமன்றம் ‘கொலைக்குற்றம் என்ற வார்த்தையை சென்னை உயர்நீதிமன்றம் கூறியது கொடுமையானது. ’ எனக் கூறியுள்ளது.