1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 6 மே 2021 (12:11 IST)

நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

நடிகை ஆண்ட்ரியா தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதை தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவர் ஆண்ட்ரியா. ஆனால் அவரது திறமைக்கு ஏற்ற வேடங்கள் வருவது வெகு சொற்பமாகவே உள்ளது. தரமணி உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் இப்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இது சம்மந்தமான ட்வீட்டில் ‘கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதியானது. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைப் பெற்று வருகிறேன். குடும்பத்தினரும் நண்பர்களும் என்னைக் கவனித்துக் கொள்கின்றனர். குணமாகி வருகிறேன்.’ எனக் கூறியுள்ளார்.