வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 25 ஆகஸ்ட் 2018 (23:03 IST)

துர்காவதியின் வாக்காளர் அடையாள அட்டையில் சன்னிலியோன் புகைப்படம்

வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள புகைப்படம் தெளிவாக இருப்பதில்லை என்று பலரும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த துர்காவதி என்ற பெண்ணின் வாக்காளர் அடையாள அட்டையில் சன்னிலியோன் புகைப்படம் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதை அடுத்து புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நாடு முழுவதும் நடந்து வருகிறது. அந்த வகையில் புதிய வாக்காளர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் உபி மாநிலத்தை சேர்ந்த துர்காவதி என்ற பெண்ணுக்கு சமீபத்தில் வாக்காளர் அடையாள அட்டை கிடைத்தது. அந்த அட்டையை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் அதில் அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக சன்னிலியோனின் கவர்ச்சி புகைப்படம் இருந்தது
 
இதுகுறித்து விசாரணை செய்தபோது தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் மேலதிகாரியால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒருவரின் விஷமத்தனமான வேலைதான் இது என்பது தெரியவந்தது. இதனையடுத்து பணிநீக்கம் செய்யபப்ட்ட அந்த நபர் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.