1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (15:03 IST)

'வேறு ஆண்களுடன் நான் ஆபாச படங்களில் நடிப்பது என் கணவருக்கு பிடிக்கவில்லை'

ஆபாச படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்த சன்னிலியோன் தனது கணவர் டேனியல் வெப்பருடன் நடந்த காதல் கல்யாணம் குறித்து வெளிப்படையாக  தெரிவித்துள்ளார்.
"என் கணவருக்கு நான் வேறு ஆண்களுடன் ஆபாச படங்களில் நடிப்பது பிடிக்கவில்லை. என் வளர்ச்சியும் புகழும் அதில் தான் என்று தெரிந்துகொண்டு அவரே என்னுடன் ஆபாச படங்களில் நடிக்கத் துவங்கினார். பின் நாங்கள் இணைந்து ஒரு நிறுவனம் தொடங்கினோம்.
 
நாங்கள் இருவரும் முதலில் ஒரு பப்-ல் தான் சந்தித்தோம். பின் இமெயில் மூலமாக பேசத்தொடங்கினோம். இருவரும் காதல் வசப்பட்டோம். நாங்கள் காதல் சொல்லி இணைந்த நாள் நேற்று நடந்தது போல் உள்ளது. ஆம், நான் பதற்றத்தோடு கையில் மோதிரம் வைத்து அவரிடம் என் காதலை சொல்ல இருந்தேன்,  எனக்கு மிகவும் தயக்கமாக இருந்தது. அந்த நொடியில் அவர் மிகவும் எளிதாக ஒரு மோதிரத்தை டப்பாவில் இருந்து எடுத்து ஐ லவ் யூ என்று கூறிவிட்டார். என்னாள் சந்தோஷம் பொருக்க முடியவில்லை துள்ளி குதித்தேன்.
 
தற்போது எங்களுக்கு திருமணம் நடந்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டது. மூன்று குழந்தைகளும் உள்ளது" இவ்வாறு கூறினார்.