புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 12 பிப்ரவரி 2018 (17:41 IST)

ராஜபக்சே மீண்டும் அதிபராக வேண்டும்: சு.சுவாமி கருத்து

மகிந்த ராஜபக்சே மீண்டும் இலங்கையின் அதிபர் ஆக வேண்டும் என பாஜகவை சேர்ந்த எம்.பி சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
 
எப்போதுமே தமிழர்களுக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்பவர் சுப்பிரமணியன் சுவாமி. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தமிழர்களை பொறுக்கி என கூறினார். இவர் தற்போது ராஜபக்சே மீண்டும் இலங்கையின் அதிபர் ஆக வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 
கடந்த முறை இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருந்தபோது விடுதலை புலிகளுக்கு எதிராக 2009-ம் ஆண்டில் நடந்த இறுதிகட்டப் போரில், இலங்கை ராணுவம் சுமார் 40 ஆயிரம் தமிழர்களை கொன்று குவித்தது.
 
இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமி ராஜபக்சேவை மீண்டும் அதிபராக வேண்டும் என டுவிட்டரில் பதிவிட்டது தமிழர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது கருத்துக்கு டுவிட்டரில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.