வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 9 அக்டோபர் 2018 (14:47 IST)

பார்சலில் பாம்பு!!! பதறிப்போன தபால் ஊழியர்

கேரளாவில் பெண் தபால் ஊழியருக்கு பார்சலில் பாம்பு அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் வர்க்கலையை சேர்ந்த அணிலா(60) என்பவர் ஒரு ஓய்வுபெற்ற தபால் அலுவலக ஊழியர். இவருக்கு ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சலை பிரித்து பார்த்ததில் அவருக்கு பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அதில்  15 செ.மீ. நீளம் கொண்ட பாம்பு இருந்தது. இதனை அனுப்பியவர் விபரம் குறித்து தெரியவில்லை.
 
இந்நிலையில் அணிலா இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பார்சலில் பாம்பு அனுப்பப்பட்ட சம்பவம் வர்க்கலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.