1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 8 அக்டோபர் 2018 (17:02 IST)

மலைப்பாம்புடன் விளையாடிய காஜலுக்கு நேர்ந்த சோதனை

சில தினங்களுக்கு முன்பு நடிகை காஜல் அகர்வால் தாய்லாந்தில் நடந்த படப்பிடிப்பின் போது மலைப்பாம்பு ஒன்றை கழுத்தில் போட்டு  வீடியோ எடுத்து வெளியிட்டிருந்தார். அது ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியது. 

இந்நிலையில் இந்த வீடியோவை பார்த்த விலங்கு நல வாரியத்தையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுத்த அவர்கள் காஜல் அகர்வாலை விளாசி உள்ளனர்.

பிரபலங்கள் இது போன்று விலங்குகள் துன்புறுத்தப்படுவதை ஊக்குவிக்கலாமா? உங்களை பார்த்த உங்கள் ரசிகர்களும் அவ்வாறு செய்வார்கள் அல்லவா? என கேள்வி மேல் கேள்விகளை கேட்டு காஜலை ஒரு வழியாக்கியுள்ளனர்
 
இதனால் நொந்துபோன காஜல் இந்த பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பது என்று சிந்தித்து வருகிறாராம். இதற்கு முன்னர் திரிஷா டால்பின் ஒன்றுக்கு முத்தம் கொடுத்திருந்த விஷயத்தில் இதே போன்று சிக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.