புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 8 அக்டோபர் 2018 (17:03 IST)

கேரளா ஈஸ் ஓபன் –கேரளா சுற்றுலாத்துறை வீடியோ வைரல்

சமீபத்திய கனமழை சேதாரங்களிலிருந்து மீண்டு வரும் கேரளா தனது சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

சென்ற மாதம் பெய்த பெருமழை கேரளாவின் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்தனர். பலர் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்தனர். ஆனால் அதையெல்லாம் மீறி எதிர்பார்க்காத வேகத்தில் மீண்டு வருகின்றனர் கேரளமக்கள்.

கேரளாவின் வருவாயில் கணிசமான அளவு அதன் சுற்றுலாத்துறையில் இருந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் தனி நபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் என லட்சக்கணக்கானோர் சுற்றுலாப் பயணிகளை நம்பி அங்கே தொழில் செய்து வருகின்றனர். சமீபத்தைய வெள்ளத்திற்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளின் வருகை கேரளாவில் குறைந்துள்ளது. இதனால் கேரளாவுக்கு சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் விதமாக கேரள சுற்றுலாத் துறையின் சாம்சோனைட் நிறுவனம் ஒரு விளம்பர படத்தை வெளியிட்டுள்ளனர்,

ஹோட்டல் உரிமையாளர் தன் வாடிக்கயாளரை எதிர்பார்த்து வாசற்கதவை அடிக்கடி பார்த்து ஏமாறுவது, விமான நிலையத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காகக் காத்திருந்து ஏமாறும் கால் டாக்ஸி ஓட்டுனர், கேரளாவின் பிரபலமான கரிமீன் வருவல் செய்து விற்கும் பெண் அதை வாங்க ஆளில்லாமல் வேதனையுடன் நிற்பது, கதகளி நடனக்கலைஞர் தன் நடனத்தைப் பார்க்க ஆளில்லாமல் சோர்ந்து போவது என கேரளா முழுவதும் உங்களுக்காக (சுற்றுலாப் பயணிகள்) காத்திருக்கிறது எனக் கூறுகிறது அந்த வீடியோ. வீ ஆர் ஓபன் எனும் அறிவிப்போடு சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக காத்திருக்கின்றனர் கடவுளின் தேசத்து மக்கள்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிரது.