திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 11 ஜூன் 2024 (13:55 IST)

முடிகிறது ஜேபி நட்டாவின் பதவிக்காலம்.. அடுத்த பாஜக தலைவர் யார்?

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டாவின் பதவி காலம் ஏற்கனவே முடிவடைந்து இருந்த நிலையில் தேர்தலை கணக்கில் கொண்டு ஜூன் மாதம் வரை நீடிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது தேர்தல் முடிவடைந்து பதவி ஏற்பு விழாவும் முடிவடைந்து விட்டதை அடுத்து பாஜக தேசிய தலைவர் தேர்வு தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 
 
பாஜக தேசிய தலைவர் பதவிக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு விருப்பமானவர் என்று கூறப்படும் வினோத் தாவ்டே பெயர் பரிசீலனையில் உள்ளது. ஆனால் மகாராஷ்டிராவில் துணை முதல்வராக இருக்கும் தேவேந்திர பட்னாவிஸுக்கு இதில் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.
 
மேலும் தெலங்கானாவை சேர்ந்த கே.லட்சுமண், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சுனில் பன்சல், ராஜஸ்தானை சேர்ந்த ஓம் மாத்தூர், பைரோன் சிங் ஷெகாவத் ஆகியோர் பெயர்களும்  பாஜக தேசிய தலைவர் பதவிக்கு பெயர் அடிபடுகிறது.  
 
மேலும் பாஜகவுக்கு முதல் பெண் தலைவரை கொண்டு வருவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த ஸ்மிருதி இரானியை கட்சி தலைவர் பதவிக்கு கொண்டு வருவது குறித்தும் பா.ஜ.க தலைமை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva