1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 10 ஜூன் 2024 (16:00 IST)

இந்துக்கள் என்பதால் தீவிரவாதிகள் தாக்குதல்..! பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் கண்டனம்..!!

Kangana Ranaut
ஜம்மு காஷ்மீரில் யாத்ரீகர்கள் பயணித்த பேருந்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக எம்.பி. கங்கனா ரனாவத், இந்து மக்கள் என்பதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
ஜம்மு - காஷ்மீரில் உள்ள சிவகோண்டா கோயிலில் தரிசனம் செய்துவிட்டு ரியாசி பகுதியில் பயணிகளுடன் மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் பயணிகள் பலர் பயணம் செய்துள்ளனர். 
 
அப்போது பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்  10 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு  குடியரசுத் தலைவர், ராகுல்காந்தி எம்.பி, காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகையும், பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத், ரியாசி பகுதியில் நடந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து   தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர்,  இந்து மக்கள் என்பதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.


உயிரிழந்தவர்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என்றும் காயமடைந்தவர்கள் குணம் பெற வேண்டிக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.