திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 2 அக்டோபர் 2022 (16:30 IST)

காங்கிரஸ் கட்சியில் என்னால் மாற்றத்தை கொண்டு வர முடியும்: சசிதரூர்

Sasitharoor
நான் காங்கிரஸ் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டால் என்னால் காங்கிரஸ் கட்சியில் மாற்றத்தை கொண்டு வரமுடியும் என காங்கிரஸ் கட்சியை தேர்தலில் போட்டியிடும் சசிதரூர் கூறியுள்ளார். 
 
காங்கிரஸ் கட்சி தேர்தல் வரும் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் இதற்கான வேட்புமனு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் தெரிந்ததே. இந்த தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசிதரூர்ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர்.
 
இந்த  நிலையில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிதரூர் நானும் மல்லிகாஜூர்னே கார்கே அவர்களும் ஒருவருக்கு எதிரி அல்ல என்றும் இது போர் அல்ல என்றும் கட்சியின் எதிர்காலத்திற்கான போட்டி என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மல்லிகாஜூர்னே அவர்கள் காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டால் அவரால் மாற்றத்தை கொண்டு வர முடியாது என்றும் ஏற்கனவே இருக்கும் நடைமுறையைத் தான் தொடருவார் என்றும் ஆனால் நான் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டால் தொண்டர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப மாற்றத்தை கொண்டு வருவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் சோனியாகாந்தி ஆதரவு சசிதரூருக்கு இல்லை என்று கூறப்படுகிறது.
 

Edited by Siva