செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (21:51 IST)

காங்.தலைவர் தேர்தல் வேட்புமனு தாக்கல் முடிந்தது: எத்தனை பேர் போட்டி?

congress
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மொத்தம் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக கூறிய அசோக் கெலாட் திடீரென விலகிய நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, சசிதரூர் மற்றும் திரிபாதி ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்
 
வேட்பு மனுவை திரும்பப் பெற அக்டோபர் 8ஆம் தேதி கடைசி தேதி என்பதும் அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.