2,000 ரூபாய் நோட்டு மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு உண்டா? மத்திய அரசு தகவல்..!

Written By Mahendran
Updated: செவ்வாய், 25 ஜூலை 2023 (10:21 IST)
2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதி முடிவடைய இருக்கும் நிலையில் இந்த காலத்தை நீட்டிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
 
2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக மே 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. எனவே செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்திருந்தது. 
 
இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடுப்பு உண்டா என்பது குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய நிலையில் அப்படி ஒரு திட்டம் அரசிடம் இல்லை என்று  மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ சவுத்ரி தெரிவித்தார்.  
 
மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை போல மற்ற நோட்டுகளை திரும்ப பெரும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

நண்பர்கள் கிண்டல்!.. 10 லட்சம் செலவு பண்ணி தாடி மாற்று அறுவை சிகிச்சை செய்த நபர்!...

Swiggy, Zomato மூலம் வரும் இலவச உணவுகள்!.. டெல்லி போராட்டத்தில் மனித நேயம்!..

ஐபோனுக்கு பதிலாக ஆயில்!.. Flipkart - யிடம் ரூ.1.80 லட்சம் இழப்பீடு பெற்ற நபர்!..

ஜனநாயகன் மூளைக்கு நல்லது!.. வாயை விட்டு ட்ரோலில் சிக்கிய சபாநாயகர்!..

300 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலம் ஆக்கிரமிப்பு.. ஒரு வாரம் கெடு, இல்லையேல் சிபிஐ தான்: நீதிமன்றம்

அடுத்த கட்டுரையில்
Show comments