ஜிஎஸ்டி மோசடி வழக்குகளை இனி அமலாக்கத்துறை விசாரிக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு..!
ஜிஎஸ்டி மோசடி வழக்குகளை இனி அமலாக்கத்துறை விசாரிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டவிராத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை மற்றும் பொருளாதார நுண்ணறிவு பிரிவு ஆகியவற்றுடன் தகவலை பகிர்ந்து கொள்ள வேண்டிய நிறுவனங்களின் பட்டியலில் தற்போது ஜிஎஸ்டி நெட்வொர்க்கை மத்திய அரசாங்கம் இணைத்துள்ளது.
இதன்படி அமலாக்கத்துறை மற்றும் பொருளாதார நுண்ணறிவு பிரிவு ஜிஎஸ்டி குறித்த முறைகேடு வழக்குகளை விசாரிக்க அதிகாரம் உண்டு என்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஜிஎஸ்டி அடையாள எண்கள் உள்ள நிலையில் அதில் 25% போலியானது என்று அதிகாரிகள் கண்டறிந்ததை அடுத்து தற்போது இந்த தற்போது அமலாக்கத்துறைக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜிஎஸ்டியின் முழு அமைப்பை மத்திய அரசு கொண்டு வந்ததால் இனிய ஜிஎஸ்டி மோசடி தொடர்பான புகார்களை அமலாக்கத்துறை தான் விசாரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva