வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து ரயில்களில் ஏசி இருக்கை கட்டணம் குறைப்பு ! - ரயில்வே வாரியம்
வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து ரயில்களில் ஏசி இருக்கை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். உலகில் மிகப்பெரிய போக்குவரத்துத் துறையாக இந்திய ரயில்வேதுறை இயங்கி வருகிறது.
இந்த நிலையில், 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வந்தே பாரத் ரயில்சேவையை அறிமுகம் செய்தது. இது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், வந்தேபாரத் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் ஏசி இருக்கை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே வாரியம் கூறியுள்ளதாவது: வந்தேபாரத் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் ஏசி இருக்கை கட்டணம் 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 10 சதவீதம் வரை கட்டணம் குறைக்கப்படும் என தகவல் வெளியான நிலையில், இன்று 25 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாகவும், 50 க்கும் குறைவாக முன்பதிவு செய்யப்படும் அனைத்து ரயில்களிலும் இதை உடனடியாக அமல்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளது.