1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 23 மே 2023 (07:49 IST)

ரூ.2000 திரும்ப பெறும் விவகாரம்: நகைக்கடைகளில் திடீரென கோடிக்கணக்கில் வியாபாரம்..!

jewel
2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுக்களை கள்ளத்தனமாக பதுக்கி வைத்தவர்கள் தற்போது அதை வெளியே எடுக்க வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளனர். 
 
இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டு அனைத்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பெற்றுக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டதை அடுத்து நகை கடைகளில் 2000 ரூபாய் நோட்டு குவிந்து வருவதாக கூறப்படுகிறது. 
 
கடந்த 2016 ஆம் ஆண்டு 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறப்பட்ட போதும் நகை கடையில் தான் அந்த நோட்டுகள் குவிந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டை கருப்பு பணமாக பதுக்கி வைத்தவர்கள் கோடி கணக்கில் நகைக்கடைகளில் நகைகள் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
எனவே 2000 ரூபாய் நோட்டை திரும்பப்பெறும் அறிவிப்பு நகைக்கடைக்காரர்களுக்கு ஒரு ஜாக்பாட் என்பது குறிப்பிடத்தக்கது. நகைக்கடை காரர்கள் தங்களுடைய விற்பனையை கணக்கில் காட்டி 2000 ரூபாய் நோட்டை வங்கியில் டெபாசிட் செய்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva