திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 22 மே 2023 (18:02 IST)

காஸ் சிலிண்டர் ரூ 500, விவசாய கடன் தள்ளுபடி: காங்கிரஸ் கட்சியின் அதிரடி வாக்குறுதி..!

சமீபத்தில் கர்நாடக மாநில தேர்தலின் போது அதிரடி வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ள நிலையில் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் வெற்றி பெற வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
காஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கு தருவதாகவும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூபாய் 1500 தர இருப்பதாகவும் 100 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்றும் 200 யூனிட் வரை பாதியாக குறைக்கப்பட்ட கட்டணம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வரும் என்றும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளதை அடுத்து மத்திய பிரதேசத்திலும் அதே போல் நிறைவேற்றுவோம் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
 
Edited by Siva